Wednesday 13 September 2017

உனக்கென்ன வேணும் சொல்லு

பாடல்  : உனக்கென்ன வேணும் சொல்லு
படம் :  என்னை அறிந்தால்
பாடல் வரிகள் :  தாமரை
இசை :  ஹாரிஸ் ஜெய்ராஜ்
பாடியவர் :  பெனி தயால், மகாதி


உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல



Thursday 7 September 2017

மறுவார்த்தை பேசாதே


பாடல்  : மறுவார்த்தை பேசாதே
படம் :   எனை நோக்கி பாயும் தோட்டா
பாடல் வரிகள் :   தாமரை
இசை :   தர்புகா சிவா
பாடியவர் :   சித் ஸ்ரீராம், சத்தியபிரகாஷ்


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு



தலை விடுதலை விழிகளில் பாருடா


பாடல்  : தலை விடுதலை
படம் : விவேகம்
பாடல் வரிகள் : சிவா
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத் ரவிச்சந்தர், ஹரிஷ் சுவாமிநாதன், அஜித் குமார்


இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு
உன் முன்னாடி நின்னு அலறினாலும்
நீயா ஒத்துக்கிறவரைக்கும்
எவனாலும் எங்கேயும் எப்பவும்
உன்ன ஜெயிக்க முடியாது

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது
கால்களில் கிழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது
தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

Never Ever Give Up

வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடிப்படை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா


வான் வருவான்

பாடல்  : வான் வருவான்
படம் : காற்று வெளியிடை
பாடல் வரிகள் : சிவா
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஷஷஷா திருப்பதி


வான் வருவான் வருவான் வருவான்  
வான் வருவான் வருவான் வருவா…………ன்  
வான் வருவான் வான் வருவா……ன்  
   
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்  
வரும்முன் அறிவான்  
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்  
தொலைவிலே பனிவான்  
கர்வம் கொண்டால் கல்லாய்  
உறைவான் கல்லாய் உரைவான் உரைவா……ன்  
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்  
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்  
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்      (வான்)
   
என்னுள் இருந்தும் எவளோ நினைவா  
அவளோடிருந்தால் எனையே நினைவான்  
என்னை துறவான் என் பேர் மறவான்  
என்னை மறந்தால் தன்னுள் வருவான்  
கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது  
கண் திறந்தால் கனத்தில் கரைவான்      (வான்)


Wednesday 6 September 2017

ஒரே ஓர் ஊரில்

பாடல்  : கண்ணா நீ தூங்டா
படம் : பகுபலி 2
பாடல் வரிகள் : மதன் கர்கி
இசை : எம். எம். கீராவணி
பாடியவர் : நயன நாயர்


நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா  
நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா  
   
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா  
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா  
என் காதில் காதல் சொல்லுவானா  
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்  
தள்ளாடும் என்னைத் தாங்குவானா  
வா என்று கட்டளை இட்டானா  
முத்தத்தில் கைவிலங்கிட்டானா  
கைதாகினால் தேவ சேனா      (நானா)
   
தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்  
மெய் தீரனா  
   
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா  
   
வாலில் முனையில் எங்கெங்கோ    
முத்தம் வைத்திடும் அரக்கனா  
   
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா  
காவி நா……ன்……  
   
ஓஹோ ஹோ ஹோ……  
ஓஹோ ஹோ ஹோ……  
ஏகாந்த காலம் மாற்றினானா  
ஓஹோ ஹோ ஹோ    
தீப்போல் என் மீது பற்றினானா  
தீக்கோலமாய் வேக சேனா    
நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா  
நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா


கண்ணா நீ தூங்டா

பாடல்  : கண்ணா நீ தூங்டா
படம் : பகுபலி 2
பாடல் வரிகள் : மதன் கர்கி
இசை : எம். எம். கீராவணி
பாடியவர் : நயன நாயர்


முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
     
பூவையர் மீது கண் ஏய்வது முறையா     
பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா     
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
     
உன் விரலினில் மலர் சுமந்து போகுமே     
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா………     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா     
     
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்     
போய்விடு மாயவனே பாணையில் வெண்ணையினை     
தினமும் திருடி இலைத்தாய் தூங்கிடு தூயவனே     
சா…………………………மனா………     
மோ…………………………கனா………     
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு     
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு     
மார்பில் சாய்ந்து கண் மூடடா      (கண்ணா)
     
சோலையின் நடுவினிலே      
முழைமேல் அலைந்தேன் தொலைந்தேன்     
தான் உனதருகினிலே     
மயங்கி கிரங்கி கிடந்தேன்     
தான் உனதழகினிலே     
மா……………………தவா……………     
யா……………………தவா…………     
லீலை செய்தே என்னை நீ கவிழ்த்தாய்     
காளை மோதி உன்னையும் கவிழ்க்க     
காயம் என்னால் கொண்டாயடா  




செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ


பாடல்
 : செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
படம் : போகன்
பாடல் வரிகள் : தாமரை
இசை : இம்மான்
பாடியவர் : லூசிமி சிவானஸ்வரலிங்கம் 


நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும் மான்பாலன்
பூவாய் எனையேந்தும் பூபாலன் (1)
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரா (2) ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ (3)
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் (4) வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும் தோழ் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போம
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா (5)

பாடல் கேட்போமா
ஆடி பார்ப்போமா

மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாதா
இன்பம் எல்லாமே
கையில் வந்தேவிழுமா

நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா??

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம்(6) செய்வாயா?

பொய்யாய் சில நேரம் வைவாயா (7)
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா ஆ…! ஆ…!

கண்கள் சொக்க செய்தாயா ஆ…! ஆ…!
கையில் சாய சொல்வாயா ஆ…! ஆ…!
எதோ ஆச்சு வெப்பம் மூச்சில் ..!
வெட்கங்கள் போயே போச்சு ..!